திருமலையில் காணாமல்போன மூன்று மீனவர்கள்.

(பொன்ஆனந்தம்,  கதிரவன்)

திருகோணமலை திருக்கடலூர் கிராமத்தில் இருந்து தொழிலுக்குச்சென்ற நிலையில் காணாமல் போன மீனவர்கள் மூவரையும் தேடும் நடவடிக்கை சங்க ரீதியாகவும் தொடர்வதாக திருக்கடலூர் விபுலானந்தா மீனவர் கூட்டுறவுச்சங்கம் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமையான நேற்றயதினம் 7 சக மீனவபடகுகள்  அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டன.

 குறிப்பிட்டபடகுகள் பயனின்றி மீண்டும் திரும்பியுள்ளன.. இன்றைய தினம் அதிகாலையில் மேலும் 15 படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திருக்கடலூர் விபுலானந்தா மீனவர் கூட்டுறவு சங்க செயலாளர் செ. பிரேமரதன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், எமது சங்க உறுப்பினர்களான திருக்கடலூர் கிராமத்தைச்சார்ந்த விஜேந்திரன் சஞ்சீவன்(21), ஜீவரெட்ணம் சரண்ராஜ் (34),சிவசுப்பிரமணியம் நதுசன்(21) ஆகிய மூவரும் வழமைபோல் 23.05.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 10.00மணியளவில் கடலுக்குச்சென்றனர்.
 சென்றவர்களின் ஏனையவர்கள் கரை திரும்பியபோதும் குறித்த படகொன்றில் சென்ற மூவரும் கரைதிரும்பவில்லை.
இந்நிலையில் இவ்விடயங்கள் தொடர்பாக திடீர் அனத்த பிரிவு இலக்கம் 117 இற்கும், திருகோணமலை கடற்படையினர், மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களுகளுக்கும் தொடர்பு கொண்டு அறிவித்துள்ளோம் மட்டுமன்றி எமது மீனவர்களின், சங்க நடமுறைக்கு ஏற்ப படகுகளும்  தேடும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஆயினும் செவ்வாய் இன்று காலை வரை எந்த தகவலும் மீனவர்கள் தொடர்பாக வரவில்லை. ஆயினும் சக மீனவர்கள் கடலில் குறித்த நாளில் கண்டது பற்றி தெரியப்படுத்தியுள்ளனர்எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இத்தேடுதல் நடவடிக்கையில் இன்று மேலும் 15படகுகள் தேடுதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனஎனவும் குறிப்பிட்டுள்ளார்.   குறித்தமீனவர்களை கண்டுபிடிக்க சக மீனவர்கள், அரச திணைக்கள ம், கடற்படையினர் உதவ வேண்டும் எனவும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.