கிழக்குமாகாணத்தில் நேற்று திங்கட்கிழமை கொவிட் தொற்று காரணமாக 09பேர் மரணமடைந்துள்ளதாக மாகாணசுகாதாரத்திணைக்களம் அறிவித்துள்ளது.அத்துடன் மாகாணத்தில் நேற்று 102பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
மட்டக்களப்பு 02 ,திருகோணமலை 06, அம்பாறை 01 என மரணங்கள் பதிவாகியுள்ளது.
நேற்றைய மரணத்துடன் கிழக்கில் இதுவரை 122 மரணங்கள் பதிவாகியுள்ளது.
அத்துடன் தொற்றுக்கள் மட்டக்களப்பு 48, திருகோணமலை 27, அம்பாறை17, கல்முனை10 என மொத்தமாக 102 தொற்றுக்கள் பதிவாகியுள்ளது.
மாகாணத்தில் 7572பேர்இதுவரை தொற்றுக்குள்ளாகியபோதிலும் தற்போது 1213பேர் சிகிச்சைபெற்று வருவதாக திணைக்களத்தின் தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.