மட்டக்களப்பு சின்னஊறணிப்பகுதியில் கொவிட் தொற்றாளர் 14 பேர் இன்றும் அடையாளம்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள சின்ன ஊறணிப்பிரதேசத்தில் இன்று 154பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 14பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச  சுகாதார திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேலும் குறிப்பிட்ட 14பேருடன் தொடர்புடைய  28பேருக்கு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்போதிலும் எவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.