திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 6 பேர் மரணம்-61 பேருக்கு தொற்று

அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 6 பேர் மரணித்துள்ள நிலையில் 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று (23) காலை 10 மணியளவில் வெளியிடப்பட்ட அறிக்கையலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூன்று பேரும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு  உட்பட்ட பகுதியில் இரண்டு பேரும், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய பிரிவில் ஒருவரும் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மூன்றாவது அலையில் இன்று வரை 60 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2021- மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று 23ம் திகதி வரை திருகோணமலை மாவட்டத்தில் 1,254 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 2020 டிசம்பர் மாதம் தொடக்கம் இன்று வரைக்கும் 2695 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 115 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 355 பேருக்கு அன்டிஜன்  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேருக்கும் குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், உப்புவெளி பிரதேசத்தில் எட்டு பேருக்கும், கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 7 பேருக்கும் குச்சவெளி சுகாதாரப் பிரிவில் ஏழு பேருக்கும், திருகோணமலையில் மூவருக்கும் தம்பலகாமம்,கோமரங்கடவல மற்றும் கந்தளாய் போன்ற சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா இரண்டு பேர் வீதம் இனங் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்..
அத்துடன்  மூன்றாவது அலையில் கிண்ணியா சுகாதார பிரிவில் 17 பேரும் திருகோணமலையில் 13 பேரும், உப்புவெளியில் 12 பேரும்,குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய பிரிவில் 9 பேரும், மூதூரில் 5 பேரும், கந்தளாயில் மூவரும், குச்சவெளியில் ஒருவரும் இன்று வரை உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.