முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளலாம்.நீதிமன்றம்.

பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் சுகாதார நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

அதன் பின்னர், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு, சட்டத்தரணி தனஞ்சயன் மற்றும் முன்னாள் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்; ஆண்டி ஐயா புவனேஸ்வரன் உள்ளிட்ட சிலர் சென்றிருந்தனர்.

இதன்போது, குறித்த பகுதியில், பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், இவ்விடத்துக்குள் செல்ல முடியாது எனத் தெரிவித்த பொலிஸார், அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதையடுத்து, குறித்த தரப்பினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் முள்ளிவாய்க்கால் அமைந்துள்ள பகுதி புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட கொவிட் தொற்றினையடுத்து இன்று இரவு முதல் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.