மட்டக்களப்பு நகரில் மூன்று கிராமசேவகர்பிரிவுகளை முடக்க பரிந்துரை.

மட்டக்களப்பு  மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில்  மூன்று கிராமசேவகபிரிவுகள்  தனிமைப்படுத்தப்படபரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

கல்லடிவேலூர், சின்ன ஊறணி, திருச்செந்தூர் ஆகியகிராமசேவகர் பிரிவுகளே முடக்கப்படவுள்ளது.

மாவட்டத்தில் கடந்த 24மணிநேரத்தில் இரு கர்ப்பிணித்தாய்மார்கள் ஒரு சுகாதார உத்தியோகத்தர் உட்பட 30பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை  1450பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில்  19 மரணங்கள் ஏற்பட்டுள்ளதுடன் தற்போது 252பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருவதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.