இரண்டாவது நாளாக முடங்கியது கிழக்கு: பயணத்தடை பூரண வெற்றி: வீதிகள் வெறிச்சோட்டம்!

( வி.ரி.சகாதேவராஜா)

கொரோனா கட்டுப்படுத்துமுகமாக நேற்றுமுன்தினம் (14)முதல் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட பயணத்தடை கிழக்கில் நேற்று(15) இரண்டாவது நாளாக தொடர்ந்தது.

நேற்றும்  கடைகள் யாவும் பூட்டப்பட்டு போக்குவரத்துகள் முற்றாக முடக்கப்பட்டன. மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் வீடுகளை விட்டு வெளியேறாமல் ஒத்துழைத்தனர்.

முஸ்லிம்மக்கள் புனித ரமழான் பெருநாளை வீட்டிலிருந்தவாறே தொழுகையிலீடுபட்டு கொண்டாடினர். வெளிநடமாட்டத்தை தவிர்த்துக்கொண்டனர்.கல்முனை காரைதீவுப்பகுதிகளில் பூரண வெற்றியளித்துள்ளது.

இந்துக்களும்  ஆலயத்திற்குச்செல்லாமல் தவிர்த்தனர்.
பிரதான வீதிகள் பெரும்பாலும் வெறிச்சோடிக்காணப்பட்டன.

முப்படையினர் கடந்தகாலங்களைப்போல ஆங்காங்கே நிறுத்திவைக்கப்படாதபோதிலும் மக்கள் வெளியேறாமல் சுயகட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டதைக்காணமுடிந்தது.
பெரும்பாலும் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே ஒருசிலர் பயணித்தனர். நகரபப்குதிகளில் பொலிசார் முப்டையினரின் ரோந்து பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.