மட்டில் ஒருநாளில் 28 தொற்று ஒரு மரணம்.படுவான்கரையில் 09பேர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 24மணிநேரத்திற்குள் 28பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் ஒருவர் மரணித்துள்ளதாக பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளானவர்களில் மட்டக்களப்பு 15 , வாழைச்சேனை 04, பட்டிப்பளை 06, வவுணதீவு 03 என தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு எல்லைவீதியைச்சேர்ந்த 74 வயதுடைய நபர் ஒருவரே தொற்று காரணமாக மரணமடைந்ததாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை பட்டிப்பளை பிரதேசத்தில் தொற்றுக்குள்ளானவர்களில் 05பேர் வெளிநாடுகளிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எனவும், ஒருவர் மட்டக்களப்பு தனியார் வைத்தியசாலையில் பணிபுணிபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பட்டிப்பளை பிரதேசத்தில் முனைக்காடு, முதலைக்குடா, மகிழடித்தீவு, பண்டாரியாவெளி, பட்டிப்பளை கிராமங்களில் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவாரத்திற்குள் 140 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 3வது அலைக்குப்பின் இதுவரை 06பேர் மரணத்தை தழுவியுள்ளனர்.