இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் சந்திப்பு.

இலங்கையில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் முறை மாற்றம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்து கொண்டார்.

தொகுதிவாரியான தேர்தல் முறைமையில் தமிழ் பிரதிநிதிகள் எவ்வாறு தமது மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது மற்றும் பாதுகாப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதாக ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார். LNW