மாநகர சபைகளில்  சிறந்த சபை மட்டக்களப்பு மாநகர சபை கருணா புகழாரம்!!

(சசி)

மட்டக்களப்பு மாநகர சபையின் செயற்பாட்டினை நான் பாராட்ட விரும்புகின்றேன் சிறந்த முறையில் முன்னெடுத்து செல்கின்றனர் என்று கருணா அம்மான் தெரிவித்துள்ளார் .

கடந்த சில மாதங்களாக மட்டக்களப்பு மாநகரசபையில்
ஏற்பட்டுள்ள அரசியல் அதிகார பிரச்சனை தொடர்பாக அவருடைய கட்சி சார்ந்த ஒருவரும்  ஈடுபடுகிறார்கள் என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்  அண்மையிலேயே அனைவரும் அறிந்த விடயம் அந்த அமரர் ஊர்தி விடயம் பாரிய பூதாகரமாக வெடித்திருந்தது .

பாராளுமன்ற உறுப்பினர் ஜனா அவர்களுடைய பெருந்தன்மையான  விடயம் தான் அந்த அமரர் ஊர்தி அதை யாராயிருந்தாலும் எதிர்க்கக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு.

அந்த விடயத்தை ஒரு அரசியலாக்கி மாநகரசபை செயற்பாடுகளை குழப்புகிறார்கள் என்று அறிய முடிகின்றது  இந்த விடயத்தில்  எங்கள் சார்பாக போட்டியிட்ட ஒருவரும் சம்மந்தப்பட்டுள்ளார்.  அவரை நாங்கள் கண்டித்து  இருந்தோம். இது போன்ற செயற்பாடுகளுக்கு போக வேண்டாம் என்று காரணம் நாங்கள் மக்களின் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும் .

என்னைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாநகர சபையை குற்றம்சாட்டுவததற்கு  அங்கு ஒரு விடயமும் இல்லை மாநகர சபையை சிறந்தமுறையில் மட்டக்களப்பு முதல்வர் நடத்திக்கொண்டு வருகின்றார்

ஆகவே மாநகர  சபை  செயற்பாட்டுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் இன்று  பார்க்கப்போனால் பாரிய மாற்றங்களை அவர்கள் மேற்கொண்டு இருக்கின்றார்கள் ஆகவே வரவேற்கக் கூடிய விடயம் என்றுதான் நான் தெரிவிக்க முடியும்.

கே . வசந்தகுமார் என்பவர் எங்களுடைய கட்சி என்று நாங்கள் கூற முடியாது அவர் எங்களுடன் இயங்குவதும் இல்லை அவரைவேறு  பிரச்சினை காரணமாக நாங்கள் இடைநிறுத்தி உள்ளோம்  தனிப்பட்ட முறையிலே தான் அவர் செயற்பட்டு வருகின்றார்.

மாநகர  சபை இவர் தொடர்பான விளக்கம்  கேட்கும் பட்சத்தில் அதற்கான தெளிவான விளக்கத்தை அளிப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன் மட்டக்களப்பு மாநகர சபை செயற்பாடு சிறப்பாக இருப்பது என்று தான் என்னால் கூற முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.