கிழக்கு பல்கலைக்கழக உதவி பதிவாளராக (Assistant Registrar) இம்தியாஸ் நியமனம்.

(யாக்கூப் பஹாத்)
இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் உதவி பதிவாளராக நிந்தவூரைச் சேர்ந்த எம்.எஸ்.எம் இம்தியாஸ் இன்று 2021.05.05  தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட இறக்காமம் அல்-அஷ்ரப் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றிய இவர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக இளமானி பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்
CIMA நிறுவனத்தில் வணிக கணக்கீட்டு சான்றிதழ் பாடநெறியை பூர்த்தி செய்துள்ள எம்.எஸ் எம்.இம்தியாஸ் வரையறுக்கப்பட்ட  Bio Energy Solution (Pvt) Ltd, மற்றும் Serendib Flour Mills (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களின் நிர்வாக நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றிய சிறந்த ஆளுமையும் நிர்வாக திறனும் கொண்டவராவார்.
இவர் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் நிறுவனத்தின் பிரதித் தலைவராக செயற்பட்டு வருவதுடன் , இதன் வளர்ச்சிப் படிகளில் காத்திரமான பங்களிப்பை வழங்கி வரும் சிறந்த சமூக சேவையாளருமாவார்.
மேலும் தீவு முழுவதற்குமான ஒரு சமாதான நீதவானாக செயற்பட்டு வருகின்றார்.