கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் அமைச்சர் சமலுடன் தமிழ்க்கட்சிகள் சந்திப்பு!

( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்  தொடர்பாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் சமல் ராஸபக்சவை  இன்று  சந்தித்து உரையாடினர் .

சந்திப்பில்   தமிழ்த் தேசியக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் அடைக்கலநாதன் சார்ள்ஸ் நிர்மலநாதன் த.கலையரசன் கோவிந்தன் கருணாகரன் வினோதாரலிங்கம் சி.வி.விக்னேஸ்வரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கஜேந்திரன் சிறிதரன் சாணக்கியன் ஆகியோர் சென்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு அதிகாரங்களை வழங்குதல் தொடர்பாக பேசியிருந்தனர்.

கடந்த முப்பது வருடங்களாக காணி நிதி அதிகாரங்கள் வழங்கப்படாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்தநிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உப பிரதேச செயலகமாக பெயரை பயன்படுத்தமாறு வெளியாகிய அறிவித்தலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டன. குறித்த அறிவித்தல் தற்றகாலிகமாக நிறுத்தப்பட்டும் இருந்தன.
விரைவாக இதற்கான தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததாக தெரிவித்தனர்.

ஏற்கனவே அரசுடன் இருக்கும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.