அரசடித்தீவு பாடசாலையில் 3மாணவர்களுக்கு 3A சித்தி

(படுவான் பாலகன்) வெளியாகியுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் கலைப்பிரிவில் 100% சித்தியை பெற்று முதன்நிலையை பெற்றுள்ளது.

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் மூன்று மாணவர்கள் 3A சித்திகளை பெற்றுள்ளனர்.

ஆறு மாணவர்கள் 100க்கும் குறைவான மாவட்ட வெட்டுப்புள்ளியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது