அரசாங்கத்தின் பல நெருக்கடிகளை தீர்க்க இன்று முக்கிய கூட்டம்.

அரசாங்கத்தின் பல நெருக்கடிகளை தீர்க்க பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்க கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (04) நடைபெற உள்ளது.

கூட்டத்தின் முக்கிய நோக்கம் மாகாண சபை தேர்தல் முறை மீதான நெருக்கடியை தீர்ப்பதாகும்.

அரசாங்கத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் 14 கட்சிகளுக்கு மேலதிகமாக, இன்று நடைபெறவுள்ள கட்சி தலைமைக் கூட்டத்திற்கு மற்ற குழுக்களும் அழைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவில் கட்சி தலைமைக் கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு  அலரிமாளிகையில்  நடைபெறும்.