மட்டக்களப்பிற்கு எம்.பி.எம். சுபியான் அனுராதபுரத்திற்கு முகந்தன்.

முஹம்மட் ஹாசில்
அனுராதபுர மாவட்ட உதவித் தேர்தல் ஆணையராக திரு. கே. முகுந்தன் இன்று(03) கடமைகளை பொறுப்பேற்றார்.

முன்னதாக அனுராதபுர மாவட்ட  உதவித் தேர்தல் ஆணையராக பணியாற்றிய திரு. எம்.பி.எம். சுபியான் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்று செல்வதால் இந்த பதவியை பெறுவதற்கு திரு. முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அனுராதபுரத் தேர்தல் அலுவலகத்தில் திறமையான அதிகாரிகள் பலர் இருப்பதைக் கேள்விப்பட்டதாகவும், அவர்களுடன் தனது பணியைச் சிறப்பாகச் செய்வார் என்று நம்புவதாகவும் கூறினார்.