மட்டக்களப்பில் திசவீரசிங்கம் சதுக்கத்தை முடக்க சிபார்சு.

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் திசவீரசிங்கம் சதுக்கம் கிராமசேவகர் பிரிவில் கொவிட்19 தொற்றுநோயாளர்கள் 13 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இப்பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கஅதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 1112பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 969பேர் சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளனர். 133பேர் தற்போதும் சிகிச்சைபெற்றுவருவதாகவும் ,இதுவரை மாவட்டத்தில் 10 கொவிட் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயுரன் தெரிவித்தார்.