இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை வைத்துக்கொள்வதை தவிருங்கள்.

சர்வதேச கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை வைத்துக்கொள்வதை தவிர்க்குமாறு மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீன்பிடி சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கோவிட் -19 வைரஸ் பரவும் அபாயம் காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எனவே,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீன்பிடி சமூகத்திற்கு ஆரோக்கியமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மேலும் தெரிவித்துள்ளார்.