மட்டக்களப்பு மாவட்டத்தின் (Covid – 19) கொரோனா தடுப்பு செயலணியின் பிரதானியாக கேணல் நிலாந்த

மட்டக்களப்பு மாவட்டத்தின் (Covid – 19) கொரோனா தடுப்பு செயலணியின் பிரிக்கேடியர் எஸ்.ஆர்.ஜீ.கமகே தனது 7 மாத சேவையினை பூர்த்தி செய்து தற்போது கம்பஹா மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் இராணுவ தரப்பு பிரதானியாக இன்று 30.04.2021 வெள்ளிக்கிழமை முதல் இடமாற்றம் பெற்றுச்செல்கின்றார்.

இவருடைய இடத்துக்கு புதிய பொறுப்பாளராக கொழும்பு இராணுவத்தலைமையகத்தில் தொடர்பாடல் பிரிவில் கடமையாற்றிய கேணல் நிலாந்த கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன்  தெரிவித்தார்.