கிழக்கில் மேலும் ஒரு கொவிட் மரணம்.

கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு  கொவிட் மரணம் பதிவாகியுள்ளது.குறிப்பிட்டமரணத்துடன் கிழக்கில் கொவிட் தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாகாணப்பணிமனை அறிவித்துள்ளது.

திருகோணமலை – மூதூர் அக்கரைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 80 வயது நபரொருவர்  மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (28) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் தற்போது மூதூர் தளவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  கடந்த 24மணித்தியாலயத்தில் கிழக்கில் 146பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதில் கூடுதலான தொற்று திருகோணமலையிலும் அம்பாறையிலுமே ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தொற்றுக்களுடன் கிழக்கில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை4241 என தெரிவிக்கப்படுவதுடன் தற்போது 505பேர் சிகிச்சைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.