மட்டில் 24மணித்தியாலயத்திற்குள் 16கொவிட் தொற்று.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 05 பொலிசார் உட்பட 16பேர் கொவிட்  தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிராந்தியசுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயுரன் தெரிவித்தார்.

அவர்மேலும் கருத்துதெரிவிக்கையில் இனிவரும் காலங்கள் மாவட்டத்தில் கோயில் திருவிழாக்கள் நடைபெறும் காலமாகும் .தயவு செய்து ஆலயங்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை முடியுமானவரை தவிர்த்துக்கொள்வது சாலச்சிறந்ததாகும்.

தற்போது பரவும் வைரஸ் பல்வேறு அறிகுறிகளுடன் தென்படுகின்றது. நியுமோனியா அறிகுறிகளுடனேயே இவ் வைரஸ் தென்படுகின்றது.இனிவரும் தொற்றாளர்களுக்கு ஒட்சிசன் பெரும்பாலும்தேவைப்படும்.  நமது மாவட்டத்திலும் பாரியதொற்றுக்கள் ஏற்படலாம்.இத்தொற்றினைதவிர்ப்பதென்றால் மக்கள் சுகாதார நடைமுறைகளைக்கடைப்பிடிக்கவேண்டும் என்றார்