நேசன் எயிட் சிறி லங்கா சமூக சேவைகள் நிறுவனத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு…!

(யு.எல்.அலி ஜமாயில்)

புனித ரமலானை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முக்கிய தேவையுடைய தேர்வு செய்யப்பட்ட 100 மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் அவர்களினால் 2021.04.26 வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வானது கல்முனை மாநகர சபை உறுப்பினர் திருமதி சுகையில் அஸுஸ் அவர்களின் ஒருங்கமைப்பில் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்படட்டது.

சாய்ந்தமருது பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரிஸ்வானா ,கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஆயிஷா சித்திக்கா மற்றும்
நேசன் எயிட் சிறி லங்கா நிறுவனத்தின் பிரதேச இணைப்பாளார்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்