மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவேனாக்கள் ஏப்ரல் 30 வரை மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் கோவிட் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரசாங்கத்தின் முடிவுக்கு ஏற்ப, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளும் ஏப்ரல் 30 வரை மூடப்படும் என்று கொழும்பில் உள்ள பேராயர் அலுவலகம் அறிவித்துள்ளது..