சபாநாயகரின் ஒப்புதல் பெற்ற பின்பே ரிசாத் கைது.

சபாநாயகரிடமிருந்து சிஐடிக்கு தேவையான ஒப்புதலைப் பெற்ற பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஸ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புள்ளதாகவிசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாகவும், சிஐடி மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து அமைச்சர்  மேலும் கூறுகையில்,

“சிஐடி சபாநாயகரிடமிருந்து தேவையான ஒப்புதலைப் பெற்றுள்ளது. முடிவுகள் உறுதிசெய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுவார்கள்.

இதற்கிடையில், ரிஷாத் பதியுதீன் மற்றும் ரியாஸ் பதியுதீன் கைது செய்யப்பட்டிருப்பது பகுப்பாய்வு தரவு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்ததாக போலீஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹானா தெரிவித்தார்.