போர்ட் சிட்டியை சீன காலனியாக மாற்றவே 20 வது திருத்தம்

சமீபத்தில், துறைமுக நகரத்தில் ஒரு சீன காலனியை நிறுவுவதற்கான மசோதாவை நிறைவேற்றுவதற்காக அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை அரசாங்கம் அவசரமாக அறிமுகப்படுத்தியது என்று சிங்கள தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர்   மெடில பன்னலோக தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட திருத்தம் இதுபோன்ற செயல்களுக்காக நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான நேரத்தை ஏழு நாட்களுக்கு மட்டுப்படுத்தியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த மசோதாவுக்குப் பின்னால் ஒரு பெரிய சதி உள்ளது என்பது தெளிவாகிறது என்று அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.