கிழக்கு உட்பட பல்வேறு மாகாணங்களில் கொவிட் தொற்று அதிகரிக்கும்.

நாட்டின் பல பகுதிகளிலும் கோவிட் தொற்று அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் இருப்பதாக பொது சுகாதார  பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹான தெரிவித்துள்ளார்.

மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  தொற்று அதிகரிப்பு உணரப்பட்டுள்ளது.

தலைவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

சீரற்ற பி.சி.ஆர் சோதனைகளுக்கான மாதிரிகள் தற்போது இலங்கையில் எடுக்கப்படவில்லை என்பது மிகவும் தெளிவாக உள்ளது. சீரற்ற பி.சி.ஆர் சோதனைகளுக்கு மாதிரிகள் எடுக்க வேண்டாம் என்று செய்திகள் பரிமாறப்படுவதை அவதானிக்கின்றோம்.

தற்போது இலங்கையின் பல பகுதிகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சில அறிகுறிகள் உள்ளன. குறிப்பாக மேற்கு மாகாணம், வடமேற்கு மாகாணம், வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிலும்  தொற்றுக்கள் பதிவாகியுள்ளதை நாங்கள் கண்டிருக்கிறோம். மேலும், தனியார் ஆய்வுகூடங்களில் பரிசோதிக்கப்படும் நோயாளிகளின் அறிவிப்பு செயல்பாட்டில் உள்ள சிக்கல்கள் காரணமாக, அந்த நோயாளிகள் வீட்டிலேயே தங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.