118 ஆண்டுகள் பழமையான கலால் கட்டளைச் சட்டத்தில் திருத்தம்

118 ஆண்டுகள் பழமையான கலால் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதில்  இலங்கை மதுவரித்திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த மசோதாவை புதிய மசோதா அல்லது திருத்தப்பட்ட மசோதாவாக அறிமுகப்படுத்தலாம் என்றும் அது இறுதி அறிக்கையின்படி முடிவு செய்யப்படும் என்றும் திணைக்களத்தின்பிரதி ஆணையாளர் கபிலா குமாரசிங்க தெரிவித்தார்.

இதற்காக திணைக்கள ஆணையாளர் 15 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார், பூர்வாங்க அறிக்கை ஜூன் 30 க்குள் முடிக்கப்படும்  என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சட்டத் துறைகளில் புதிய போக்குகளுக்கு ஏற்ப சட்டத்தில் திருத்தம் செய்ய கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலைக் குறைத்தல், தவறு செய்ததற்காக அபராதங்களை அதிகரித்தல் மற்றும் வரி வசூல் செய்வதே முக்கிய நோக்கங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.