2021இற்குள் மாகாணசபைத்தேர்தல் சாத்தியமில்லை.அமைச்சர் விமல் வீரவன்ச

2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், இது சாத்தியமில்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று  அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, புதிய தேர்தல் முறைக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். எனவே, அதன் வரைவு உருவாக்கப்பட வேண்டிய ஒரு செயல்முறை இருக்க வேண்டும், பிளவுகளின் முன்கணிப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார்களைப் பெறுவதற்கான நேரம் இது தேவை மற்றும் வரைவு சட்டமா அதிபரிடமும் பின்னர் அமைச்சரவையிலும் எட்டப்பட வேண்டும் .. இந்த செயல்முறையைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை

ஒற்றையாட்சி முறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது.

அரசாங்கத்தின் இலக்கை திசை திருப்ப பல குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன

ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி குறுகிய காலத்தில் அரசாங்கம் பல சவால்களை எதிர்க் கொண்டுள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஏற்பட்ட சவால்களை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றி கொண்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அரச ஆதரவுடன் எழுச்சி பெற்றது.

ஜெனிவா விவகாரம் அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக காணப்பட்டது. சர்வதேசத்தில் மண்டியிடாமல் இராணுவத்தினரை அரசாங்கம் பாதுகாத்துள்ளது.

ஜெனிவா விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை வெற்றிக்கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.