மாகாண சபைத் தேர்தல் மக்கள் இறையாண்மையை மீறும் செயற்பாடு – மகா சங்கத்தினர் குற்றச்சாட்டு

சி.அருள்நேசன்.

இலங்கையில் காணப்படும் பௌத்த சங்கங்களின் முக்கிய 14 மகாநாயக்க தேரர்கள் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்காக அரசாங்கம் தீர்மானித்துள்ள முடிவினை நடைமுறைப்படுத்த செய்யும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒரு பகிரங்க கடிதம் அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் இந்த தீர்மானமானது பொதுமக்களின் கருத்துக்கு எதிரானது . இக்கடிதமானது ‘மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான மாகாண சபை தேர்தல் சட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்தும் செயற்பாடானது பொதுமக்களின் இறையாண்மையை மீறுவதாகும்’ என்ற அடிப்படையில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதில் அதிவண. இத்தேபானே தம்மாலங்கார தேரர், அதிவண. தோடம்பஹால சந்தஸ்ரீரி தேரர், அதிவண. திருகோணமலை ஆனந்த தேரர், வண.ஒம்மாறே கஸ்ஸப்ப அனுநா தேரர், வண. துpவியாகஹ யசஸ்சி தேரர், கலாநிதி. வண.அகலகட சிரிசுமன தேரர் உள்ள 14 தேரர்கள் இக்கடிதத்தில் கையொப்பம் இட்டிருந்தனர்.
அதில் மேலும் குற்பிடுகையில், ‘பொதுத்தேர்தலில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க நியமிக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழுவின் பரிந்துரைகளைப் பெறுவதற்கு மாகாண சபை தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதற்கு அமைச்சரவை எடுத்த விவேகமற்ற முடிவு நாட்டின் செயற்பாட்டுத் தன்மையை சரிசெய்ய ஒரு தவறவிட்ட வாய்ப்பாகும்.  என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.’
‘மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபைகள் மீண்டும் அமைக்கப்பட்டால் 13 அரசியலமைப்பு திருத்தச்சட்டத்திற்கு அமைய செயற்படுவதற்கு அரசாங்கம் இணைந்திருக்க  வேண்டும்.

ஆகவே பொதுத்தேர்தலில் மக்களால் வலியுறுத்தப்பட்டு எதிர்ப்பார்க்கப்பட்ட முக்கியமான உறுதிமொழியை இது போன்ற ஒரு வருட குறுகிய காலத்தில் மறந்துவிட்டமைதுரதிஸ்டவசமானது.
மாகாண சபைத் தேர்தலை நடாத்தாமல் இருக்க சில மாதங்களுக்கு முன்னதாக மகா சங்கத்தினர் முன்வைத்த தொலைநோக்கு, பகுப்பாய்வு மற்றும் அறிவார்ந்த முன்மொழிவுகளை முன்வைத்தும் அவற்றை கருத்திற் கொள்ளாது மக்களின் இறையாண்மையை சிதைக்கும் வகையில் இம்மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த விரும்பும் தேசத்துரோக செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் கனிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்’ என குறிப்பிட்டுள்ளனர்..