மெளலவி காத்தான்குடி பெளசினால் காத்தான்குடி பொது நூலகத்திற்கு 293 நூல்கள் அன்பளிப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி நகர சபையின் கீழ் இயங்கிவரும் காத்தான்குடி பொது நூலகத்திற்கு மெளலவி காத்தான்குடி பெளசினால் 293 நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

அன்பளிப்பு செய்யப்பட்ட மேற்படி நூல்களை கையளிக்கும் நிகழ்வு இன்று 07 புதன்கிழமை காத்தான்குடி நகர சபையில் இடம்பெற்றது.
இதன் போது  அன்பளிப்பு செய்யப்பட்ட நூல்கள் மௌலவி காத்தான்குடி பெளசினால் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் , பிரதம நூலகர் கமலினி ருத்தரகுமார் ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அன்பளிப்பு செய்யப்பட்ட குறித்த 293 நூல்களில் 22 நூல்கள் மெளலவி காத்தான்குடி பௌசினால் எழுதப்பட்ட நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.