மட்டுநகரில் போதைப்பொருள் வாங்குவதற்காக சேவல்கோழிகளை திருடிய இளைஞர்கள்.

இவ்வாறான ஆறுபேர் நேற்று மட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 41வயதுடையவரானவும், மற்றைய ஐந்துபேரும் 18 தொடக்கம் 24வயதுக்குட்பட்டவர்கள் என  தெரியவருகின்றது.

குறித்த நபர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதுடன் தினமும் போதைப்பொருள் 2 ஆயிரம் ரூபா வரை பணம் செலுத்திவாங்கி பாவித்து வந்துள்ளதாகவிசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

போதை பொருளுக்கு அடிமையாகிய  இவர்கள் போதைப்பொருட்களை வாங்குவதற்கு பணத்தேவைக்காக  வீடுகளை உடைத்து தங்கநகை உட்பட பல்வேறு பொருட்களை திருடியுள்ளதாகவும் விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.

கைது செய்யபட்டவர்களிடமிருந்து சேவல்கோழி உட்பட பல்வேறு பொருட்களை மீட்டுள்ளதுடன், இவர்கள் கொள்ளையிட்ட தங்கச்சங்கிலி இன்னும் மீட்கப்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர்.