ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை விடைபெற்றார்.

( வாஸ் கூஞ்ஞ)

கடந்த பெரிய வியாழக்கிழமை (01.04.2021) அன்று இறைபதம் அடைந்த ஓய்வுநிலை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் இறுதி கிரிகை நேற்று திங்கள் கிழமை (05.04.2021) பிற்பகல் மூன்று மணிக்கு மன்னார் பேராலயமான புனித செபஸ்தியார் ஆலயத்தில் இடம்பெற்றது.

இறுதிக் கிரிகைக்கான ஆயர்களின் கூட்டுத்திருப்பலியானது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மனுவேல் பெனாண்டோ ஆண்டகையின் தலைமையில் இடம்றெ;றது

இவ் கூட்டுத்திருப்பலியில் இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதி மேதகு உடைய்க்குவ பிரியின் ஆண்டகை, கர்தினால் மல்கம் கார்டினல் றன்சித் ஆண்டகை உட்பட அகில இலங்கை ஆயர்களான மேதகு கொழும்பு துணை ஆயர்களான அன்ரன் றஞ்சித் ஆண்டகை, மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகை, ஜே.டீ.அன்ரனி ஆண்டகை, குருநாகல் ஆயர் ஹர்லோட் அந்தனி ஆண்டகை, இரத்தினபுரி ஆண்டகை கிளிற்றஸ் பெரேரா ஆண்டகை, திருமலை ஆயர் நோயல் இம்மானுவேல் ஆண்டகை, மட்டக்களப்பு ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை, பதுளை ஆயர் வின்சன்ட் பெனாண்டோ ஆண்டகை, யாழ் ஆயர் ஜே.ஞாணப்பரகாசம் ஆண்டகை, சிலாபம் ஆயர் வளன்ஸ் மென்டிஸ் ஆண்டகை, அனுராதபுரம் ஆயர் நோபேட் அன்றாடி ஆண்டகை, திருமலை ஓய்வுநிலை ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை மற்றும் கண்டி ஆயர் வியானி பெனாண்டோ ஆண்டகை ஆகியோர் இணைந்து இவ் இரங்கல் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

இவ் திருப்பலியைத் தொடர்ந்து பாப்பரசரின் பிரதிநிதி இரங்கல் உரையாற்றினார் அத்துடன் கார்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகையின் செய்தி மற்றும் பிரதமரின் செய்திகள் இங்கு தமிழில் வாசிக்கப்பட்டன.
இதை;தொடர்ந்து மறைந்த மன்னார் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகையின் திருஉடல் பேராலயத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த கல்லறைக்குள் மாலை ஐந்து மணியளவில் ஆயர்கள் அருட்பணியாளர்கள் மற்றும் அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், புடைசூழ நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதை;தொடர்ந்து ஆலயத்தக்குள் அமைக்கப்பட்ட அவரின் கல்லறையை மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அனுமதிக்கப்பட்டனர்.