திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் பதற்றம்

பைஷல் இஸ்மாயில் –

திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் உரிமையாளர் இல்லாத இரும்புப் பெட்டி ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதால் இன்று (05) ஒரு பதட்ட நிலை ஏற்பட்டது.

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் மூதூர் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளுக்கான பேருந்துகள் தரித்து நிற்கும் இடத்திற்கு அருகாமையில் குறித்த பெட்டி கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

விசேட அதிரடிப்படையினரும்இ குண்டு செயலிழக்கும் அணியினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்து பலத்த பாதுகாப்புடன் குறித்த பெட்டியை திறந்து பார்த்தபோது அப்பெட்டி இராணுவ சிப்பாய் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டது.

அதனையடுத்து அப்பிரதேசம் பதற்ற நிலைமையில் இருந்து பொதுமக்கள் விடுபட்டு காணப்பட்டதுடன் மீண்டும் பழைய நிலைமைக்கு போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து விடயங்களும் வழமைக்கு திரும்பியமையும் குறிப்பிடத்தக்கது.