ஆயரின் நல்லடக்கத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்த மன்னாரில் இயல்பு நிலை முடக்கம்

(வாஸ் கூஞ்ஞ)
மறைந்த மன்னார் மறைமாவட்ட ஒய்வுநிலை ஆயரின் இறுதி கிரிகையை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதியில் பூரண துக்க அனுஷ்டானம் மேற்கொள்ளும்படி தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க திங்கள் கிழமை 05.04.2021) மன்னாரில் இவ் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் ஒருசில உணவகங்கள் தவிர பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன
அரசாங்க இலங்கை போக்குவரத்து சபை சேவைகள் தவிர தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை
 அரச திணைக்களங்கள் மற்றும் வங்கிகள் திறந்திருந்தபோதும் பொது மக்களின் வருகை மிக குறைவாகவே காணப்பட்டன. அத்துடன் ஆயரின் திருவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல கிராமங்களிலிருந்தும் மன்னார் பேராலயத்துக்கு சாரி சாரியாக வந்த மக்கள் வெள்ளத்தைக் காணக்கூடியதாக இருந்தது
பாடசாலைகளில் தற்பொழுது தவணை பரீட்சைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதால் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்றிருந்தனர்
சுருங்கக்கூறின் இன்று மன்னார் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பியம் அடைந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது எனலாம்
ஆயரின் மறைவையொட்டி மன்னார் நகர் உட்பட சகல இடங்களிலும் கறுப்பு வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.