பிள்ளையான் இட்ட கட்டளை நாமலிடம் கேள்விகேட்ட இரா.சாணக்கியன்.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கிராமப்புற பொருளாதார மேம்பாட்டு சம்பந்தமாக ஆராயும் கூட்டத்திற்கு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பை ரத்து செய்ய சிவனேசதுரை சந்திரகாந்தன்  எடுத்த நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனங்கள்  எழுந்துள்ளது.

குறிப்பிட்ட கூட்டத்திற்கு விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷ தலைமை தாங்கினார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கருணாகரன் மாவட்டத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்திருந்தார். அவர்களில் இரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவிந்தன் கருணாகரன் மற்றும்  இரா.சாணக்கியன் ஆகியோரும் அடங்குவர்.

அடுத்த நாள், மாவட்ட செயலாளர் இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும்  கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

இருப்பினும், இரு எம்.பி.க்களும் கூட்டத்தில் கலந்து கொண்டு விளையாட்டு அமைச்சரிடம் ஏன் அழைப்புகள் ரத்து செய்யப்பட்டன என்று கேள்வி எழுப்பினர்.

ஆனால் இது குறித்து நமல் ராஜபக்ஷவுக்கு எதுவும் தெரியாது.

அதன்படி, எம்.பி.  சந்திரகாந்தன்தான்  அவர்களின் அழைப்புகளை ரத்து செய்ய விரும்பியதாக  தெரியவந்துள்ளது..