இலங்கை நாட்டின் பெயர் சிங்ஹலே என மாற்றப்பட வேண்டும் – பிக்குமார் பரிந்துரை

சி.அருள்நேசன்

நாட்டின் பெயர் இலங்கை என்பதற்கு மாறாக ‘சிங்ஹலே’ என மாற்றம் செய்யப்பட வேண்டுமென  புதிய அரசியலமைப்பை உருவாக்க நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவுக்கு இலங்கையின் பிக்குமார்கள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர்.

ஸ்ரீ ரோஹன பிரிவின் சார்பாக அனுநாயக்க வண.ஓமாரே கஷ்ஸப தேரர் அவர்கள் இந்த பரிந்துரையினை கையளிக்கும்போது பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“இந்த நாட்டின் பெயர் சிங்ஹலே என மாற்றப்பட வேண்டும் என்பதைiயை நான் குறிப்பிட்டிருந்தேன். இந்நாட்டின் அரசகரும முதன்மை மொழியாக சிங்களம் மாத்திரம் இருக்க வேண்டும். அடுத்து, இந்த நாட்டின் வரலாற்றுப் பிரிவு, ‘ருஹ_ணு’, ‘மாயா’ மற்றும் பலவற்றின் அடிப்படையில் முதன்மைப்படுத்தி நிர்வாகத்தின் பிரிவு உருவாக்கப்பட வேண்டும். எங்கள் திட்டங்களுக்கு அவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன்.” “நான் இலங்கை குடியரசு என்ற பெயரை பரிந்துரைத்தேன். எந்த வகையிலும் அதிகாரப் பகிர்வு எதுவும் இருக்கக்கூடாது. ” என வண. பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டிருந்தார்.

இக்கருத்துக்களானது பண்டாரநாயக்க ஞாபகார்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு நிபுணர்களின் குழுவில் உரையாற்றும்போது மேற்கூறப்பட்டவாறு அவர்களின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இதனை  தொடர்ந்து ஊடகங்களுடன் கருத்து தெரிவித்த எல்லே குணவன்ச தேரர் குறிப்பிடுகையில், “நாங்கள் பூமியைப் பற்றி மட்டுமல்ல, வானம், கடல் மற்றும் விலங்குகள் தொடர்பாகவும் கருத்துக்களை முன்வைத்தோம். வேறு பல விடயங்கள் தொடர்பாகவும் கருத்துக்கள் முன்வைத்தோம். நாங்கள் எதிர்வரும் காலங்களில் அரசியல் கட்சி கொள்கை பிரகடத்தை முன்வைப்போம். அவை தொடர்பாக முறையாக செயற்படுத்தப்படாவிடில் நாங்கள் அதற்கான நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எனவும் குறிப்பிட்டிருந்தமை முக்கியமானதாகும்