இயேசுபிரான் உயிர்த்தெழுந்த உயிர்ப்பு ஞாயிறு கொண்டாட்டங்களில் கிழக்கு கத்தோலிக்க மக்கள்

ரீ.எல்.ஜவ்பர்கான்-
இயேசுநாதர் உயிர்தெழுந்ததை நினைவு கூறும் உயிர்ப்பு ஞாயிறு தினம் இன்றாகும்.இதனையொட்டி கிழக்கு மாகாண கத்தோலிக்க தேவாலயங்களில் விசேட திருப்பலி பூசைகளும் ஆராதனைகளும் இடம் பெற்றன.

பிரதான உயிர்ப்பு ஞாயிறு ஆராதனை மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் இடம்பெற்றது.மட்டக்களப்பு அம்பதறை மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசர் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.நாட்டின் அமைதி சமாதானத்திற்காகவும் கொரோனா அச்சுறுத்தலி நீங்கவும் விசேட பிரார்தனைகளும் இடம்பெற்றன.
பெருமளவிலான கத்தோலிக்க பக்தர்கள் பங்கு கொண்டனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகள் பேணப்பட்டதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.