ரீ.எவ்.ஜவ்பர்கான்
இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட பெரிய வெள்ளிக்கிழமை இன்று கிறிஸ்தவ மக்களினால் கிழக்கு மாகாணத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கத்தோலிக்க தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம் பெற்றதுடன் திருச்சிலுவை ஊர்வலங்களும் இடம்பெற்றன.
மாவட்டத்தின் பிரதான திருச்சிலுவை பாதயாத்திரை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தின் முன்னால் ஆரம்பமானது..
பெருமளவிலான கத்தோலிக்க பக்தர்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணி கலந்து கொண்டனர்.