திருமறைக்கலாமன்ற ஸ்தாபகர் கலைமாமேதை நீ.மரியசேவியர் அடிகளாருக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின் அஞ்சலிகள்.

கலைவாழ்விணூடே சமூகத்தை நேசித்த உன்னத மனிதர் திருமறை கலாமன்றத்தின் ஸ்தாபகர் அரங்கதுறைசார்ந்த மிகப்பெரும் ஆளுமை  மரியசேவியர் அடிகளாரை இழந்து நிற்கின்ற இத்தருனத்தில் புத்தாக்க அரங்க இயக்கம் தனது தலைசாய்த்த அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கின்றது.

கலை தருகின்ற சுகம் கனதியானது.
கலைச்செயற்பாடுகளின் மூலம் சமூக அசைவியத்தை ஏற்படுத்தல் மாற்றத்திற்கான திறவுகோலாகும்.
அரங்க துறை, இலக்கியத்துறை சார்ந்து மதத்திணூடாக மனிதரை நேசித்த மனிதரை எமது சமூகம் இழந்திருக்கின்றது.
இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
 அரங்க துறை சார்ந்த வகையில் செழுமைப்படுத்தி இறைவழி கலைச்சேவையாற்றிய மாகானின் இழப்பு எம்மை துயர் கொள்ள வைத்திருக்கின்றது.
நீண்ட நெடிய ஈழத்தமிரங்கப்புலத்தில் நிறுவனமயப்படுத்தப்பட்ட வகையில் அரங்க செயற்பாடுகளின் மூலம் அவர் ஆற்றிய பணிகள் கனதியானவை.
அப்பணிகளை காலம் தன் குறிப்பேட்டில் குறித்து வைத்துக்கொள்ளும்.
அவரது இழப்பினால் ஏற்படுத்தப்பட்ட வெற்றிடத்தினால்
காலம் தந்திருகின்ற துயர் எம்மை நிலை குலைய வைத்திருக்கின்றது.
அந்திம காலம் வரை மானிடரை கலையிணூடாக நேசித்த மனிதரை இழந்து எமது மண் கலங்கியிருக்கின்றது.
இளைய தலைமுறையினரை நல்வழிகாட்டி வளப்படுத்தி ஆசுவாசித்துஅவர்களை இயங்கியலாளர்களாக்கிய உன்னத ஆத்மாவின் இழப்பு எமதுசமூகத்திற்கு பேரிழப்பாகும்.
காலத்தின் தேவையுனர்ந்து இன நல்லுறவிற்காய் அரங்கினை கருவியாகக் கொண்டு இவர் திருமறைக்கலாமன்றத்தினூடாக  மேற்கொண்ட  காலத்தினால் கொண்டாடப்படவேண்டிய கனதியான பணி.
செழுமை மிக்க அரங்க பாரம்பரியத்தில்  காத்திரமான சேவையினை  ஆற்றியதன் அடிப்படையில் அவர் கொண்டாடப்படுவார்.
அரங்கு மட்டுமல்லாது இலக்கியம், சஞ்சிகையாக்கம்  என பலதளத்தில் அவர் ஆற்றிய பணிகளை நோக்கப்பட வேண்டுயவை.
 ஈழத்திலும் ,புலத்திலும்  திருமறைக்கலாமன்றத்தின் சேவைகளை விரிவுபடுத்தி தனது இறுதி கணம் வரை கலையையும் மண்ணையும் மக்களையும் நேசித்த மனிதருக்கு  சிரம்தாழ்த்திய இறுதி அஞ்சலியினை கனத்த இதயத்துடன் செலுத்துகின்றோம்.
தனது இயங்கு விசை மூலம்    அரங்கையும்  தான் சார்ந்து செயற்பட்ட இலக்கியப் புலத்தினையும் வளப்படுத்திய இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
இ்வ் மனிதருக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் இதயம் கனக்கும் இறுதி அஞ்சலியினை தெரிவித்துக்கொள்வதுடன்
இவரது  ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்.
தான் ஆற்றிய கலைச் சேவை மூலம் கலைஞர்களது இதயங்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
இயக்குநர் _எஸ்.ரி.குமரன்
நிர்வாக இயக்குநர் _எஸ்.ரி.அருள்குமரன்
புத்தாக்க அரங்க இயக்கம்.
தலைமையகம்.
“சக்தி வாசா”
கோவில் வீதி,
மல்லாகம்.