ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு வழக்கு

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி  தெரிவித்தார்..

ஆணைக்குழுவின் அறிக்கையைப் படித்து அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சட்டமா அதிபர் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்வார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி இதை தெரிவித்தார்.