ஹஸ்பர் ஏ ஹலீம்_
காட்டு யானைப் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்காமையால் தீர்வினை கோரி வீதிமறியல் போராட்டம் ஒன்று இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியின் 98 ம் கட்டை சந்தியில் வீதியை மறித்து அப்பகுதி மக்கள் இன்று (30) போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பல முறை உரியவர்களுக்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை யானை வேலி அமைக்காமை குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோசங்களை எழுப்பியிருந்தனர்கள்.
சம்பவ இடத்துக்கு பொலிஸ் உயரதிகாரி வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்ட விகாராதிபதியுடன் பேசியதற்கு இணங்கவும் உரிய அரச உயரதிகாரி ஒருவருடனான தொலை பேசி உரையாடலையடுத்தும் மக்கள் வீதியை விட்டு சற்று விளகி வாகன போக்குவரத்துக்கு இடம் கொடுத்தனர்.
குறித்த பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் வரை தடைப்பட்டது இக் குறித்த போராட்டத்தில் விகாரையின் விகாராதிபதி மற்றும் பொது மக்கள் பலர் பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.





