கிண்ணியாவில் ஆசிரியர்கள் மூவருக்கு கொரனா.வீடு திரும்பிய மாணவர்கள்.

எப்.முபாரக்  2021.03.29

திருகோணமலை கிண்ணியாவில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அப்பாடசாலைக்கு இன்று (29) வருகை தந்த  மாணவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.

இதன்காரணமாக பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு இம்மாதம் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து இப்பாடசாலையின் மூன்று ஆசிரியர்கள் பிசிஆர் பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்றாளர்களாக நேற்று(28) இனங்காணப்பட்டனர்.

எனினும் முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மாணவி சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.