சாய்ந்தமருது ஜும்மாபள்ளிவாசல் தலைமை நிர்வாகி காலமானார்.

நூருள் ஹுதா உமர்.
சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவரும் , ஓய்வுபெற்ற அதிபருமான அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா (87) நேற்று மாலை சாய்ந்தமருதில் அமைந்துள்ள அவரது வீட்டில் காலமானார். நீண்டகாலமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவரின் இழப்பு மக்கள் மத்தியில் கவலையை தோற்றுவித்துள்ளது. அவரது ஜனாஸா சாய்ந்தமருது தக்வா ஜனாஸா மையவாடியில் நேற்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

சாய்ந்தமருது நகரசபைக்காக போராடி வந்த இவரின் ஜனாஸா செய்தியை அறிந்து
அரசியல் தலைவர்கள், முக்கிய அரச நிர்வாகிகள், கல்விமான்கள், ஊர் மக்கள் என பலரும் நேரில் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.
.