பதவியை இழப்பாரா ராஜபக்ச?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மே மாதம் 17ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை புஞ்சி சீகிரிய விகாரையின் விகாராதிபதி பம்பரவானே சத்தாதிஸ்ஸ தேரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தொழில் ரீதியாக அம்பாறை சுகாதார வைத்திய அலுவலகத்தில் பணியாற்றிய திலக் ராஜபக்ஷ ஒரு வைத்தியர் எனவும் அவர் தேர்தலில் போட்டியிடும் போது தனது பதவியை இராஜானிமா செய்யவில்லை எனவும் தேரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

அதனால் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க அவருக்கு தகுதி இல்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு விசாரணை செய்யப்படும் வரை திலக் ராஜபக்ஷவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து இடைக்கால தடை உத்தரவு பிறப்புக்குமாறும் தேரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

LNW