டிஜிட்டல் தளத்தை’ ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதி திறந்து வைத்தார்.

“புதிய கல்வி சீர்திருத்தத்தின்” மூலம் அறிவும் திறமையும் நிறைந்த தலைமுறையாக நாட்டின் எதிர்கால தலைமுறையை உலகிற்கு கொண்டு வர வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உத்தேச கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கோருவதற்காக ‘டிஜிட்டல் தளம்’ தொடங்குவதற்காக இன்று (26) அலரிமாளிகையில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

டிஜிட்டல் தளத்தை’ ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்

முன்பள்ளி கல்வி, ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி, தொழிற்கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி மற்றும் உயர்  தொழிற்கல்வி ஆகிய நான்கு முக்கிய துணைத் துறைகளின் கீழ் சீர்திருத்த திட்டங்கள் செய்யப்படும்.

“டிஜிட்டல் தளம்” ஒரு பரந்த பொதுக் கருத்துக்கும், நிலையான கல்விக் கொள்கைக்கான ஆலோசனையுடனும் திறக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தங்களின் மற்றொரு குறிக்கோள் உயர் கல்விக்கு அதிக அணுகலை வழங்குவதாகும்.

வேலைவாய்ப்பை மேம்படுத்தும் அதே வேளையில் வேலை செய்பவர்களின் கல்வித் தகுதிகளை மேம்படுத்துவதற்காக திறந்த பல்கலைக்கழக முறையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும்

இலங்கை குழந்தைகள் அனைவருக்கும் முன்பள்ளியில் இருந்து முழுமையான கல்வியை வழங்குவதே தனது நோக்கம் என்றும், இணையம் மற்றும் தொழில்நுட்பத்தில் தற்போதுள்ள குறைபாடுகள் 2023 ஆம் ஆண்டளவில் முற்றிலுமாக அகற்றப்படும் .

புதிய கல்வி சீர்திருத்தங்கள் பெருமைமிக்க கடந்த காலத்தையும், பெருமைமிக்க எதிர்காலத்தையும் கொண்ட இலங்கைக்கு கொடுக்கும் என்று நம்புவதாகவும் ஜனாதிபதி  தெரிவித்தார்..