வீதியை புனரமைத்துத் தருமாறு மகஜர் கையளிப்பு (எச்.எம்.எம்.பர்ஸான்)

ஓட்டமாவடி – மாஞ்சோலை சிகரம் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் அமைந்துள்ள வீதியை புனர்நிர்மாணம் செய்து தருமாறு சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மாஞ்சோலை ஜும்ஆப் பள்ளிவாசல் வீதியால் குறுக்கறுத்துச் செல்லும் நீரோடையோடு இணைந்துள்ள வீதி மிக நீண்டகாலமாக புனர்நிர்மாணம் செய்யப்படாமல் காணப்படுகிறது.

குறித்த வீதியால் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் செல்ல முடியாத நிலை காணப்படுவதோடு, சக்கர நாற்காலிகளில் வரும் மாற்றுத்திறனாளிகளும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பாடசாலை, பள்ளிவாசல், மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் காரியாலயம், தையல் பயிற்சி நிலையம், வாசிகசாலை போன்றவை அமைந்துள்ள இவ் வீதியைப் பயன்படுத்துவோர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு அவ்விடத்தை புனர்நிர்மாணம் செய்து தருமாறு சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் எஸ்.ஐ.தௌபீக் அவர்களின் தலைமையில் தவிசாளர் ஏ.எம்.நௌபர் அவர்களிடம் மகஜரை ஒன்றினை கையளித்துள்ளனர்.