வாழைச்சேனையில் ஹெரோயினுடன் இளைஞன் கைது.

வாழைச்சேனை ஹைராத் வீதியில் இன்று (புதன்கிழமை) மாலை ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸாரும் இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக 2032 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த வாழைச்சேனை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் விஷேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது