ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்திய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்..
இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும்.
ஜெனீவாவில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிப்பதாக வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் கூறிய பின்னரும் இந்த விஷயத்தில் மோடியின் மௌனம் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை காட்டிக் கொடுக்கும் எந்த முயற்சியையும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஸ்டாலின் மோடியை எச்சரித்தார்.