இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி.

இந்தியாவில் இருந்து 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யும் திட்டத்தின் கீழ் 25,000 மெட்ரிக் தொன் பொன்னி சம்பாவை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சு தயாராகி வருகிறது.

வர்த்தக அமைச்சர் பண்டுல குணவர்தன அரிசியை இறக்குமதி செய்து ஏப்ரல் முதல் வாரத்தில் சந்தைக்கு வெளியிட முடிவு செய்துள்ளார். இந்திய தூதரகம் தற்போது இந்திய வர்த்தகத் துறையுடன் கலந்தாலோசித்து அரிசி மாதிரிகள் மற்றும் விலைகளைப் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய மாநிலமான கேரளாவில் தயாரிக்கப்படும் பொன்னி சம்பா இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளது.

மீதமுள்ள 75,000 மெட்ரிக் தொன் அரிசி தேவைக்கேற்ப இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் பண்டுல குணவர்தன சமீபத்தில் 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவையில் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.