கீழ்த்தர கருத்தை நிராகரிக்கிறேன்.நசீர் அஹமட்டின் கருத்திற்கு ரவுப் ஹக்கீம் பதிலடி.

அரசாங்கம் கொரோனா சடலங்கள் இன்றி மையப்பெட்டிகளை புதைப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வௌியிட்ட கருத்தை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் நிராகரித்துள்ளார்.

“இந்த அரசாங்கம் முஸ்லிம்களின் உள்ளத்தை அதிகளவு நோகடித்துள்ளது. இறுதியில் சர்வதேச தலையீட்டில் அந்த உரிமை கிடைத்தது. நசீர் அஹமட் போன்றவர்கள் அவர்களது முயற்சில் இதனை செய்ததாக கூறினால் அது முட்டாள்தனம். எமது உறுப்பினர்கள் வௌியிடும் இவ்வாறான கீழ்த்தர கருத்தை நிராகரிக்கிறேன்” என ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டார்.