பாராளுமன்ற உறுப்பினர்களுக் கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படும்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்கும் வகையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பத்து இலட்சம் ரூபா காப் பீடு தொகை தொடர்பில் பாராளுமன்ற செயற்குழுச் சபையில் முன் வைக்கப்பட்ட நிலையில்,இப் பிரேரணை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் என பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கூடிய  கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதற்காக பாராளுமன்ற செயற்குழுவின் அனுமதி பெறப்பட் டுள்ளது. அது நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுமதியைப் பெற வேண்டும். எனினும் அரசியலமைப்பின் பிரகாரம் 68 (1)இல் குறிப்பிட் டுள்ள சரத்தின் ஊடாக முன்வைக்கப்படும் போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பை பெற முடியும்
சபாநாயகர் மேலும் கூறுகையில், முந்தைய இரண்டு அரசாங்கங்களின் கீழ்           சம்பளங்கள் அதிகரிக்கப்படாததையும், சம்பளத்தை அதிகரிக்க பாராளுமன்ற         உறுப் பினர்கள் கோரியதையும் கருத்தில் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின்        சம்பளத்தை அதிகரிக்க முன் மொழியப்பட்டுள்ளது எனக் கூ றினார்.
நல்லாட்சியின் காலத்தில் அப்போதைய சபைத்தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க முன் மொழிந்தார். ஆனால் எதிர்க் கட்சியின் கடுமையான எதிர்ப்பால் கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டியிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்கும் திட்டத்திற்கு பாராளுமன்ற செயற்குழு உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் எதிர்க்கட்சி உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது ஒத் துழைப்பினை வழங்கி உள்ளனர் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.